புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவுக் கடலில் பரபரப்பு!! இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படைச் சிப்பாய் பலி!!

யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர்.

அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படை வீரர் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார்

அதனை அடுத்து மேலதிக கடற்படையினர் , மீனவர்களின் படகுக்கு சென்று , படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படை படகில் ஏற்றினர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும், அவர்களின் படகும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x