புதினங்களின் சங்கமம்

வடமாகாண அமைச்சின் செயலாளர்கள் அதிரடியாக மாற்றம்

வடமாகாண அமைச்சின் செயலாளர்களில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி, மாகாண நிர்வாகத்தில் இந்த தடலாடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுனரின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உள்ளூராடசி அமைச்சின் செயலாளராக உள்ள வரதீஸ்வரன், கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பேரவை செயலாளர் குகநாதன், பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை, பதில் பிரதி பிரதம செயலாளராகவும் பணியாற்றி வந்த, பற்றிக் ரஞ்சன் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராக செயற்படுவார்.

ஆளுனரின் செயலாளராக தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.