புதினங்களின் சங்கமம்

யாழில் காசைக் காலால் மிதித்து விசர்க்கூத்து ஆடிய தியாகி மீது வழக்கு பாய்ந்தது!! சிறையில் அடைக்க ஆயத்தம்?

யாழ்ப்பாணத்தில் யூடியூப் வீடியோக்களினால் தறிகெட்டு செயற்பட்ட தியாகி வாமதேவன் இன்று (22) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான். தியாகி மீது திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி வாமதேவன் என்ற விசர்க்கூத்தாடி ஒருவனின் தறிகெட்ட செயற்பாடு தமிழர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

உதவி செய்கிறேன் என்ற பெயரில், விளம்பரம் தேடும் தியாகியின் மனநிலையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அவனிடம் தனிப்பட்ட ரீதியில் உதவி தேடிச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்களை பலர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுனர் பதவியை எதிர்பார்த்து, தியாகி இராணுவத்தினரின் ஊடாகவே உதவித்திட்டங்களை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஆளுனர் பதவி கிட்டவில்லை. இந்த பின்னணியில், யூடியூப்பர்கள் அவரை மொய்க்க, அவன் வீடியோ போதைக்கு ஆளாகி, தன்னை மறந்து அநாகரிகமான வெளிப்பாடுகளை செய்ய தொடங்கினான்.

அண்மையில், தன்னை நேர் கண் பெண்ணின் முன்பாக நாணயத்தாள்களை மிதித்து, ரணில் தன்னை சந்திக்க வருவதாக அண்டப்புளுகு புளுகினான்.

அவர் நாணயத்தாள்களை மிதித்தமைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய தியாகி மீது யாழ்ப்பாண பொலிசார் நடவடிக்கையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு தியாகி அழைக்கப்பட்டான்.

அவன் திங்கள்கிழமை மீள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும். அன்று அவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவான்.

இதேவேளை, தியாகி அண்மையில் வெளிநாடு சென்றது, கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தியாகியின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக நாம் தகவல்களை வெளியிடவுள்ளோம்.