புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி நண்பனின் வீட்டில் திருடிய யாழ்ப்பாண நண்பர்கள் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களால் களவாடப்பட்ட ஒன்பது இலட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

உதயநகர் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு, அந்த வீட்டின் உரிமையாளரின் மகனுடன், நண்பர்கள் இருவர் அடிக்கடி வருவது வழமையான ஒன்றாகும். கடந்த. 16 ஆம் திகதி அன்று வீட்டு உரிமையாளர்கள், வீட்டில் வைப்பட்ட நகையை தேடிய போது நகை காணாமல் போயுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, நகையை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் (20) கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து கிளிநொச்சி பொலிஸார் விரைந்து செயற்பட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நகையையும் மீட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் பல தரப்பட்ட குற்றமிழைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவ் களவு தொடர்பாக கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.