புதினங்களின் சங்கமம்

14 வயதுச் சிறுவனுடன் உறவு கொண்ட 45 வயது பெண் விடுதலையானது எப்படி? கம்பஹா நீதிமன்றில் நடந்தது என்ன?

14 வயது சிறுவனை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 45 வயதுடைய பெண்ணுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தின் 2ஆம் இலக்க நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பெண் மனவளர்ச்சி குறைந்தவர் என்பதை குறிப்பிட்டார்.குற்றம் சாட்டப்பட்டவர் அந்தக் குற்றச் செயலை செய்ய எண்ணத்துடன் இருந்தார் என்பதை நிரூபிக்கப்படவில்லையென கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் முதிர்ச்சியற்ற மன நிலையே இந்த குற்றத்துக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் ஹைப்போமேனியா மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கில் சாட்சியமளித்த நிபுணர் மனநல மருத்துவர் கே.டி.சி. பெர்னாண்டோவின் சாட்சியத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் மற்றும் மன அம்சங்களை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் கூறினார்.

இருவரின் சம்மதத்துடன்தான் முறைகேடு நடந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளதாக கூறிய நீதிபதி, செயலின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பொறுப்பு இருவருக்குமே இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி திருமதி ஷிராணி திஸாநாயக்க ஆஜரானார்.

பதினான்கு வயது சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மேகவத்தை பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.