யாழில் ஆசிரியரின் உதவியாளரான 20 வயது யுவதி 10 வயது மாணவிகள் மீது மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல் காட்சிகள்!!
குப்பிளான் விக்னேஸ்வராகல்லூரியின் ஆசிரியரின் உதவியாளர் மாணவிகள் மீது தாக்குதல்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் உதவியாளர் மாணவிகளை தாக்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்து. குறித்த உதவியாளரான ஆசிரியர் தரம் 4 மாணவிகள் மீது தாக்கியதால் இரண்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய தரம் நான்கு வகுப்பில் 15 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த வகுப்பு ஆசிரியர் 5 மாணவர்களை மாத்திரம் கற்பித்து கொண்டு ஏனைய 10 மாணவர்களை கற்பிப்பதற்கு க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடைந்த 20 வயதான யுவதி ஒருவரை 10000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் மாணவிகள் இருவர் பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்ததன் காரணமாக மாணவிள் மீது தடியால் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த இரு மாணவிகளின் பெற்றோரும் அதிபருடன் முரண்பட்ட நிலையில் ஒரு பெற்றோர் தனது முகநூலில் பிள்ளையின் தாய் மேற்பட்ட நிலையினை புகைப்படமாக பதிவைற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அதிபர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரை அழைத்து இவ்வாறு பதிவிட்டால் மேலதிக பிரச்சினைகள் எழும் எனவும் குறித்த தற்காலிக ஆசிரியையினை தான் வெளியேற்றியுள்ளதாகவும் பொறுப்பாசிரியர் மீது கல்வி திணைக்கள நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இது குறித்து வலிகாமம் வலய கல்வி பணிப்பாளரௌ தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குறித்த பாடசாலை தொடர்பில் இருமாணவர்கள் தம்மிடையே முரன்பட்ட நிலையில் காயம் ஏற்பட்டதாக அறியமுடிகிறது. எதிர்வரும் திங்கட்கிழமையே விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்ற பொழுது சம்பவம் குறித்த முழுமையான விடயம் தெரியவரும் என தெரிவித்தார்.இந்நிலையில் மாணவர்களிடையே முரன்பாடு ஏற்படவில்லை என பெற்றோர் நிராகரித்துள்ளனர். இதேவேளை ஏனைய மாணவிகளும் தாக்குதலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.