இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 9வது நபர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் மரணமடைந்துள்ளார்.
முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதன்படி இலங்கையில் இதுவரை 9 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

