யாழில் 10 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்த முருகேசு ஜெசிந்தன் ஆசிரியருக்கு பணித்தடை!!
யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்ததக குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் முருகேசு ஜெசிந்தன் ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவியுடன் முருகேசு ஜெசிந்தன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்tஹிருந்தனர்.
ஆசிரியருக்கு பணித்தடை
அதன் அடிப்படையில் , பொலிஸார் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , ஆசிரியர் தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு , குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.