புதினங்களின் சங்கமம்

யாழ் புங்குடுதீவில் 30 வயது இளைஞனை வெள்ளை வானில் கடத்தியது யார்? பரபரப்பு தகவல்கள் இதோ!!

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தினை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரை புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினைச் சேர்ந்த கும்பலொன்று வாகனமொன்றில் கடத்திச்சென்று மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து வெட்டிக்கொல்லமுற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞர் படுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களையும் 56 – 2519 என்கிற இலக்கத்தகடுடைய ஹயஸ் வாகனமொன்றினையும் மானிப்பாய் மற்றும் ஊர்காவற்துறை பொலிசார் தேடிவருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்நபர்களுக்கிடையில் ஏற்கனவே பல தடவைகள் கோஷ்டி மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் .