“வெளியே வா மோதிப் பார்க்கலாம்” சாமல் – பொன்சேகா நாடாளுமன்றல் கடும் சண்டை!!
அமைச்சர் சாமல் ராஜபக்சவுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையே நாடாளுமன்றில் இன்று சூடான வாக்குவாதம் இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்றுக்கு வெளியே மோதிப் பார்க்கலாம் என அமைச்சர் சாமல் ராஜபக்ச – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் ஒருவருக்கொருவர் சவால் விடுத்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக்காவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து இன்று சபைக்குள் வந்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இதன்போதே அமைச்சர் சாமல் ராஜபக்ச – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் வார்த்தைகளால் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இதனால் நாடாளுமன்றில் பரபரப்பான சூழல் நிலவியது. எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பினால் பாராளுமன்ற சபை நடவடிக்கை இன்று காலை 05 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

