யாழ் பெருமாள் கோவில் பகுதியில் ஹேரோயின் பாவித்துக் கொண்டிருந்த காவாலிகளுக்கு நடந்த கதி!!

யாழ்.நகருக்குள் உள்ள பெருமாள் கோவில் சுற்றாடலில் ஹெரோயின் நுகா்ந்து கொண்டிருந்த 4 இளைஞா்கள் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் சிக்கியுள்ளனர்.சுமார் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்களே இந்த ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் யாழ். நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விசாரணையின் பின்னர், யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை பண்பாட்டிற்கு பெயர்போன யாழ்மண்ணில் பள்ளி செல்கின்ற பருவத்தில் பிள்ளைகள் இப்படியான செயல்களில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)