Home புதினங்களின் சங்கமம் பொலிஸ் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சிங்கள அரசியல்வாதிக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!

பொலிஸ் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சிங்கள அரசியல்வாதிக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!

யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான துஷித வெலகெதர என்பவரே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, குறித்த பொலிஸ் அதிகாரி தன்னை தாக்கியதாக தெரிவித்து துஷித வெலகெதர, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.