யாழ்ப்பாணத்தில் சற்று முன் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்!!
யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த, சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.