Vampan memes

‘வரதராஜப் பெருமாளின் முதலிரவுக்கு அடுத்த நாள் இரவு நான் போனேன்‘!! கம்பவாருதி!!

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தனக்கு ‘லொஜிக்‘ கற்பித்த ஆசிரியர் எனவும், அவர் தன்மீது அதிக அக்கறை வைத்திருந்தவர் எனவும், அவருக்கு கலியாணம் நடந்து இரு நாட்களுக்குள் தன்னைத் தொடர்பு கொண்டு வீட்டுக்குப் படிக்க வா என கூறினார் எனவும் கம்பவாருதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இன்று நல்லுார் துர்க்கா மணிமண்டபத்தில் நடந்த கம்பவிழா பட்டிமன்றத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வரதராஜப் பெருமாள் கலியாணம் கட்டி இரு நாட்களுக்குள் தன்னை தொடர்பு கொண்டு வகுப்புக்கு வரும்படி கேட்ட போது ‘சேர்! உங்களுக்கு இப்பத்தான் கலியாணம் நடந்தது, அதுதான் நான் வரவில்லை‘ என தான் கூறிய போது ‘அந்த அலுவலுகள் தனக்குப் பார்க்க தெரியும், நீ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் படிக்க வா‘ என வரதராஜப் பெருமாள் கூறினார் என ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.