புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் கடற்படையினரால் 4 பேர் பிடிபட்டது ஏன்?

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் ஒரு படகுடன் நேற்று முன்தினம் 19.04.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் அம்பன் தொடக்கம்-சாலை வரை தொடர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நால்வர் படகுடன் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நால்வரும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அழைத்துவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.