புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்பரேசனுக்கு காசு கேட்டார்கள்! கொடுக்கவில்லை!! சகோதரியை கொன்றுவிட்டார்கள்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.


யாழ் போதனா வைத்திய சாலையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது இறந்துள்ளார்.

தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச் சாட்டுகின்றனர்.

அரச வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர். இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.