திருகோணமலை விபத்தில் சிறுவன் பலி!
திருகோணமலை – புல்மோட்டை வீதியில் குச்சவெளி நகரில் நேற்று (12) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றும், டிரக்டர் வண்டியொன்றும் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும், 07வயது சிறுவனும் 03வயது சிறுமியும் காயமடைந்துள்ளதை தொடர்ந்து, குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் மொஹம்மது றினோஸ் நிஸ்ரி சரீப் எனும் 07வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

