யாழில் பாண் விற்கும் ஆட்டோச்சாரதி மற்றும் யுவதி உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதே வேளை
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , பெண் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண்ணும்80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

