புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர்.போராட்ட காலத்தில் கடற்புலிகள் படையினை சேர்ந்த மகளிர் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்தவர் என்றும் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் புலம்பெயந்து அவுஸ்திரேலியா அவர் சென்றதாகவும் , இந்நிலையில் சுகயீனம் காரணமாக ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) நேற்று (23) உயிரிழ்நதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) க்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தர் தமிழினி உட்பட பல பெண் போராளிகள் மற்றும் ஆண் போராளிகள் இளவயதிலேயே பலியாகிவருவதும் யுத்தம் முடிவடைந்த பின் சரணடைந்த புலிப் போராளிகளுக்கு இராணுவத்தால் நச்சு ஊசி மருந்து ஏற்றப்பட்டதாக கூறப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.