FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

கிழக்கின் துப்பாக்கிதாரிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பிரபலங்கள்! வெளிவரும் பரபரப்பு தகவல்கள்!!(Photos)

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த காலங்களில் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் இருந்த இரண்டு பொலீசாரை படுகொலை செய்தது யார் என்று திண்டாடிக்கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியுள்ளது.

இன்நிலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பணிப்­பாளர் நேச­குமார் விமல்ராஜ் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில்

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்பு தரப்பினர் முயற்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழுவின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பணிப்­பாளர் நேச­குமார் விமல்ராஜ் மீது கடந்த 2017 ம் ஆண்டு 22 ஆம் திகதி இரவு 7.15 மணி­ய­ளவில் துப்­ப­ககிச் சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

களுதாவலையில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரி­யாத இருவர் இந்த துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­விட்டு தப்பிச் சென்­றி­ருந்­தனர்.

களு­தா­வளை 4 ஆம் பிரிவில் சோம­சுந்­தரம் வீதி­யி­லுள்ள அவரது வீட்­டுக்கு வந்த இனம் தெரி­யாத நபர்கள் அவரை வெளியே அழைத்து அவ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருக்­கும்­போது அவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்டுவிட்டு தப்பி சென்­றிருந்தனர்.

இந் நிலையில் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்புத் தரப்பினர் தவறியுள்ளதாகவும் மாறாக இவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் சில பாதுகாப்பு அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக காணி ஆணையாளர் விமல்ராஜ் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தன்மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் சிலர் பதிவு செய்து வருகின்றனர் எனவும் இதனால் தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றார்களா ? என்ற சந்தேகம் எழுவதாகவும் எனவே தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து மீளவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுமாறு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னணி!

துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் காணி ஆணையாளர் அவர்கள் தொடர்வுபட்ட பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதில் மிக முக்கியமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தளவாய், சவுக்கடியில் பகுதிகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளை அரசியல் செல்வாக்கு உள்ள சில முஸ்லீம் செல்வந்தர்கள் அப­க­ரித்து அடைத்து வைத்திருந்தனர். அதற்கு எதி­ராக மிக கடு­மை­யான நிலைப்­பாட்டை காணி ஆணையாளர் விமல்ராஜ் அவர்கள் எடுத்திருந்தார்.

இதனால் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் மீது குறித்த காணி அபகரிப்பில் ஈடுபட்ட சிலர் ஏறாவூர் புன்­னக்­குடா பகு­தியில் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கவும் முற்­பட்­டிருந்தனர்.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­துடன் பொலிஸார் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இத­னை­விட நேச­குமார் விமல்ராஜ் மீது துப்­பாக்கிப் பிர­யோ­கம் மேற்கொள்ளப்பட்ட நாளான 2017. 22. 02 ஆம் திக­தி அன்று அரச இடங்­களை அப­க­ரிப்­போ­ருக்கு எதி­ராக நீதி­மன்ற உத்­த­ரவு ஒன்­றினைப் பெற்­றுக்­கொள்ள ஏறாவூர் நீதி­மன்­றுக்கு சென்­றுள்ளார்.

அன்று காலை 7 மணியளவில் அவரை நீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது என்று அச்சுறுத்தி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

Image may contain: one or more people

இருந்தும் அன்றைய தினம் அரச காணியில் சட்­ட­வி­ரோத கட்­டு­மான பணி­களை முன்­னெ­டுத்த போது ஏறாவூர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் நால்வர் மீதான வழக்கிற்கு அவர் ஏறாவூர் நீதிமன்றம் சென்­றுள்ளார்.

அன்றைய தினம் இரவே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனவே காணி அபகரிப்பின் பின்னணியிலேயே இவர் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றிருந்ததாக அப்போது சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக குறித்த விசாரணைகள் திசைதிருப்பப்பட்டதாக தெரிகிறது.

இந்த துப்­பா­ககிச் சூடு தொடர்­பி­லான விசா­ர­ணைகளை முன்­னெ­டுக்­க. குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவும் மட்­டக்­க­ளப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் தலை­மை­யி­லான 5 பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதும் இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த சந்தேக நபர்களையும் பொலீசார் கைது செய்யவில்லை.

ஆனால் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசங்களில் இயங்கிவந்த ஆயுதக்குழுக்களுக்கும் மட்டக்களப்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

Image may contain: one or more people and close-up

இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை மட்டும் இன்றுவரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

விமல்ராஜ் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் மட்டக்களப்பில் சட்ட விரோத காணி அபகரிப்பில் ஈடுபட்ட குழுவினர் சிலர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று விமல்ராஜ் அவர்களை பலதடவை அச்சுறுத்தி வந்த நிலையிலேயே அவர் மீதான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இன்நிலையில் காத்தான்குடி அரசியல்வாதி ஒருவரின் தலைமையில் ஏறாவூர், சவுக்கடி பகுதிகளில் முஸ்லீம்களை குடியேற்றும் நோக்குடன் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் அரச காணிகள், பல தோனாக்கள் என்பன சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு அவற்றை அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்துவந்த குழுவினர் மீதே அப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன ஆனால் அரசியல் அழுத்தங்கள் காரணமாக குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திசைதிருப்பப்பட்டு விமல்ராஜ் அவர்களே ஆள் வைத்து தன்னை சுடச்சொல்லியதாக தகவல்கள் பரப்பப்பட்டது.

குறித்த பொய் குற்றச்சாட்டு தொடர்பாக விமல்ராஜ் அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றிருந்தது.

அந்த நேரத்தில் விமல்ராஜ் மீதான துப்பாக்கிச் சூட்டை யாரோ மிகவும் திட்டமிட்டு திசைதிருப்பி இருந்ததுடன் அதை அரசியல் தலைவர்கள் உட்பட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வரைக்கும் நம்பத்தகுந்த தகவலாக பதிவு செய்திருந்தனர். இது சம்பந்தமாக விமல்ராஜ் அவர்கள் பொலீசார் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதாவது தன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திசை திருப்ப பொலீசார் முயற்சி செய்வதாகவும் அப்படி என்னை நானே ஆள் வைத்து சுட்டுக்கொண்டால் அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அதனை பொலீசார் நிரூபித்திருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் தன்மீதான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களை கண்டுபிடிக்க எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாதது பாதுகாப்பு தரப்பினர் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்து நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்கு உண்மையான சந்தேக நபர்களை முன்னிலைப் படுத்த வேண்டும் என்றும். அவ்வாறு செய்ய தவறினால் குற்றவாளிகளை காப்பாற்ற பாதுகாப்பு தரப்பினர் முயற்சி செய்கின்றனரனரா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்லும் என அவர் கூறினார்.

இதே நேரம் மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் அவர்களை சுட்டுக்கொன்றவர்களை பாதுகாப்பு தரப்பினர் நேருங்கிய போதும் அவர்களை இதுவரை கைது செய்ய முடியாது உள்ளதாக தெரிகிறது. குறித்த படுகொலையில் தமிழ் அதிகாரிகள் சிலரது பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது அது குறித்து அடுத்த பத்தியில் எதிர்பாருங்கள்.