யாழில் மர்மமனிதனை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்!! (Photos)

யாழ்.இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றின் அருகில் சந்தேகத்திற்கிடமான இளைஞனை பிரதேச மக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன், பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவ து, இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழையும் ஒழுங்கைக்குள்

முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் அந்த முச்சக்க ர வண்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதுடன்,

வீட்டையும் நோட்டமிட்டுள்ளாா். இதனையடுத்து முச்சக்கர வண்டியின் உாிமையாளா் குறித்த இளைஞனை நெருங்கி விசாாித்துள்ளாா்.

இதன்போது அவா் சிங்களத்தில் சரளமாக பேசியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த முச்சக்கர வண்டி உாிமையாளா் தனது நண்பா்களை அழைத்துள்ளாா்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முச்சக்கர வண்டி உாிமையாளாின் நண்பா்களும் இளைஞனை விசாாித்துள்ளனா். அப்போதும் அவா் சிங்களத்தில் பேசியுள்ளாா்.

மேலும் முன்னுக்கு பின் முரணான கதைகளையும் கூறியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்து இளைஞனை பிடித்து மின் கம்பத்துடன் கட்டியுள்ளனா்.

பின்னா் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரகசிய பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாாித்தபோது அவா் தமிழில் பேசியுள்ளாா்.

இதன்போது தான் மூதுாா் பகுதியை சோ்ந்த இஸ்லாமியா் எனவும், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் தமிழ் பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துள்ளதாக

கூறியதுடன் சிறுநீா் கழிப்பதற்காகவே ஒழுங்கைக்குள் சென்றதாக கூறினாா். பின்னா் காசு வாங்க போனதாக கூறினாா். இதனையடுத்து இரகசிய பொலிஸாா்

இளைஞனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனா்.

error

Enjoy this blog? Please spread the word :)