லண்டன் தமிழ் கோடீஸ்வரர் வெள்ளவத்தையில் தற்கொலை முயற்சி!! சிறுமியுடன் உறவு கொண்டு கோடிக்கணக்கில் இழந்தாரா?
லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. குறித்த வர்த்தகர் கடந்த வருட இறுதியிலிருந்து இலங்கையில் தங்கியுள்ளார். தங்கியிருந்த காலப்பகுதியில் 4 தடவைக்கு மேல் லண்டனிலிருந்து 12 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான மதிப்பான பவுண்ஸ்களை மாற்றியுள்ளார் எனவும் தெரியவருகின்றது. தற்போது தற்கொலைக்கு முயன்ற பின்னரே இது தொடர்பாக வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.
வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான பங்களாவிலேயே வர்த்தகர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். வர்த்தகரது வெள்ளவத்தை வீட்டில் பாதுகாவலர் ஒருவரும் சமையலாளர் ஒருவரும் தொடர்ச்சியாக வசித்து வந்துள்ளார்கள்.வர்த்தகர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் லண்டனில் இருந்து வரும் போது அவர்களை அங்கு தொடர்ச்சியாக அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். இந் நிலையில் வர்த்தகர் லண்டனிலிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். 18 நாட்கள் தங்குவதாக குறிப்பிட்டே அவர் இலங்கைக்கு சென்றதாக அவரது மனைவி கூறினார். இருந்தும் தான் மேலும் சில நாட்கள் இலங்கையில் தங்க வேண்டியுள்ளதாகவும் தனது நண்பனுடன் சேர்ந்து கம்பனி ஒன்று ஆரம்பிக்க உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் லண்டனிலிருந்து பணம் பெற்றுள்ளார்.
தனது வீட்டுக்கு வந்து தங்கியுள்ள நேரத்தில் பல தடவைகள் தனது வீட்டு சமையல்காரர் மற்றும் பாதுகாவலரை லீவில் அனுப்பி தனியே அங்கு தங்கியுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரு வேலைகாரர்களையும் வீட்டை விட்டு அனுப்பிய பின்னர் திங்கள் காலை வருமாறு அவர்களுக்கு கூறி தனித்திருந்துள்ளார். திங்கள் காலை வீட்டு பாதுகாவலர் வந்த போது வீட்டின் சோபா செற்றியில் மயக்க நிலையில் கிடந்த வர்த்தகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னரே குறித்த வர்த்தகர் துாக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விடயம் தெரியவந்துள்ளது.
வர்த்தகர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் அங்கு 13 வயது மதிக்கத்தக்க சிறுமியும் நடுத்தர வயதானவர்களும் வீட்டுக்குள் சென்று வந்துள்ளது சிசிரிவி கமரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வர்த்தகரின் நெருங்கிய நண்பர்களும் உறவுகளும் வர்த்தகர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தொடர்பில் கடுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக வர்த்தகரின் நண்பர்கள் மூலமாக பொலிசார் சிலரும் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இருப்பினும் இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் பொலிசாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதுடன் எந்த வைத்தியசாலையில் வர்த்தகர் சிகிச்சை பெறுகின்றார் என்ற விபரமும் இரகசியமாகப் பேணப்படுவதாக தெரியவருகின்றது.
குறித்த வர்த்தகருக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களின்படி வர்த்தகர் பாலியல்பலவீனமானவர் என்பதுடன் சிறுமிகளுடன் உறவு கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருபவர் என தெரியவருகின்றது. அத்துடன் வர்த்தகரின் வீட்டுப்பாதுகாவலரிடம் விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஜனவரி மாத முற்பகுதியில் வர்த்தகரிடம் இருதடவைகள் சிறுமி ஒருவருடன் ஆட்டோவில் ஒருவர் வந்து இரவு தங்கிச் சென்றுள்ளார். தான் குறித்த சிறுமியின் தந்தை என்றும் வர்த்தகரின் நண்பன் என்றுமே பாதுகாவலரிடம் குறித்த நபர் கூறியுள்ளார். அவர்கள் வந்து சென்ற இரு நாட்களின் பின்னர் வர்த்தகர் கடும் உழைச்சலில் காணப்பட்டதாகவும் பாதுகாவலர் கூறியுள்ளார்.
சிறுமியுடன் உறவு கொள்ளச் செய்து வர்த்தகரை அச்சுறுத்தி பல கோடி ரூபாக்களை சிலர் கப்பமாக பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதே வேளை இலங்கையில் வர்த்தகர்கள் மற்றும் பணக்காரபுள்ளிகளை குறி வைத்து, அவர்களின் பாலியல் பலவீனங்களை பயன்படுத்தி, 15 வயதுக்கும் குறைவான சிறுமிகளை அவர்களுடன் உறவுக்கு அனுப்பி, அதன் பின்னர் வயது குறைந்த சிறுமியுடன் உறவு கொண்டதாக கூறி அச்சுறுத்தி, பல வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என கூறி, கோடிக்கணக்கில் பணம் பெற்றுவரும் சம்பவங்கள் நடப்பதாக தெரியவருகின்றது. இதற்கு சில பொலிஸ் அதிகாரத்தரப்பினரும் உறுதுணையாக நிற்பதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பல சம்பவங்களை அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கத்தை நாம் தொடர்ச்சியாக தரவுள்ளோம்.