கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவதால் பெரும் ஆபத்து!!
கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இதுவரை உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லையென உலக சுகாதார அமைப்பின் பிரதம விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இதுவரை போதிய ஆதாரங்கள் மற்றும் தரவுகள் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகியுள்ள நிலையிலேயே இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பிரதம விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.
உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கொரோனாவுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் தற்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிகுதியாக உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார்

