புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ் குடும்பஸ்தர் சுரேஸ் ஏன் கைது

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளியாகியுள்ள தகவல்
பெண் மீது தாக்குதல்
கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

படுகாயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.