புதினங்களின் சங்கமம்

வெள்ளி முதல் கோவில்களுக் அனுமதி! திங்கள் முதல் ரியூசன் வகுப்புகளுக்கு அனுமதி!!

வரும் வெள்ளிக்கிழமை முதல் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும், திங்கட் கிழமை முதல் தனியார் வகுப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.

வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வரும் 15ம் திகதி திங்கட் கிழமை முதல் 100 பேருக்கு உட்பட்டதாக மேலதிக வகுப்புகளை நடத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.