புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் குடிகாரனைக் கட்டுப்படுத்த புறப்பட்டுச் சென்ற டக்ளஸ்!! என்ன கொடுமை!!

டக்ளஸ்தேவானந்தாவின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
அதிகாலையில் அட்டகாசம் செய்த ஆசாமி மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி நடவடிக்கை
கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கிய நபர் ஒருவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அந்த நடு ராத்திரி வேளையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி பஸ் தரிப்பிடத்தில் அமைதி நிலையை ஏற்படுத்த உதவுமாறு அவசரக் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து இரவோடு இரவாக பொலிஸாரை பஸ் தரிப்பிடப்பகுதிக்கு அனுப்பி வைத்து அட்டகாசம் புரிந்த ஆசாமியை கைது செய்து வழமை நிலையை ஏற்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். உடனடி நடவடிக்கை எடுத்து உதவிய அமைச்சரை நேரடியாக வருமாறு அழைத்த வியாபாரிகளின் அழைப்பை ஏற்று காலை பஸ் தரிப்பிடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி விஜயத்தை மேற்கொண்டார். இவ்வாறு  அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்ப்பட்டுள்ளது.
இதே வேளை ஒரு குடிகாரனைக் கட்டுப்படுத்த முடியாமல் அமைச்சர் ஒருவர் தலையிடும்  அளவுக்கு நாட்டின் சட்டம், ஒழுங்கு சீரழிந்து உள்ளதா? என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.