திரும்ப திரும்ப பாலியல்வல்லுறவு செய்தார்கள்!! உறுப்புக்குள் கம்பி சொருகினார்கள்!! கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் பல வழக்குகள்!!
பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட 2 சிங்களவர்கள் உள்பட
10 இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடம் இழப்பீடு
கோரி அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பில் ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதியாகும் நம்பிக்கையுடன் இருக்கும் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக
இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
அமெரிக்காவின் மத்திய மாவட்டத்திற்கான நீதிமன்றில் 10 புதிய இழப்பீட்டுக் கோரிக்கைகளை
எதிர்நோக்குகின்றார்.
நேற்று ஜூன் 26ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், தமது பாதுகாப்பை
கருத்திற்கொண்டு தம்மை அடையாளங்காட்டாமல் இருக்கும் 10 புதிய வழக்குதொடுநர்கள் கோத்தாபய
ராஜபக்சவின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ
முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமான மீறல்களை விபரிக்கின்றார்கள்.
சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள்,
பெற்றோலில் நனைத்த பினாஸ்டிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு
திணறடிக்கப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் திரும்பதத் திரும்ப பாலியல்
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டார்கள்.
இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களில்
எட்டுப் பேர் தமிழர்கள் இரண்டு பேர் சிங்களவர்கள்.
நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச சட்ட
நிறுவனமான கோஸ்பீல்ட் உடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தால்
மேற்கொள்ளப்பட்ட ஆறு வருட கால விசாரணைகளின் விளைவாகவே இந்த வழக்குகள் வந்துள்ளன.
கடந்த ஏப்பிரல் 5 இல் கனடா பிரஜையான றோய் சமதானம் என்பவரின் சார்பாகமுதலில் தாக்கல்
செய்யப்பட்ட முன்னைய வழக்கில் இந்த வழக்கு தொடுநர்களும் இணைந்து கொள்கின்றனர். இந்த
வழக்கானது அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம்
வழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது .
கோத்தாபய ராஜபக்சாவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி மூன்று தனிநபர்கள் ரோய்
சமதானத்தை நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தயடுத்து ஏப்பிரல்
29ஆம் திகதி ஒரு தொந்தரவை உடன் இடைநிறுத்துவதற்கான மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது.
சகோதரர் இலங்கையினுடைய ஜனாதிபதியாக இருக்க, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 வரை
இலங்கையின் சக்திவாய்ந்த பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ச,
தண்டனைகளிலிருந்து விதிவிலக்குடன் திட்டமிட்ட ரீதியில் ஆள்களை கடத்தி சித்திரவதை செய்து
, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சந்தேகநபர்களிடமிருந்து பணம் பறித்த கட்டளையின்
பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தார் என வழக்குத் தொடுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த துஸ்பிரயோகங்கள் நடந்த காலப் பகுதியில் கோத்தாபய ராஜபக்ச ஒரு அமெரிக்க நாட்டுக்
குடிமகனாக இருந்தார்.
தமக்கு நடந்த சித்திரவதைகளில் இலங்கையின் முக்கிய பொலிஸ் விசாரணை அதிகாரியான நிசாந்த
டி சில்வா உள்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக
தொடர்புபட்டுள்ளனர் என வழக்குத் தொடுநர்கள் அடையாளங்காட்டுகின்றனர்.
உடல் முழுவதும் அடித்து , சீலிங்கில் இருந்து தலை கீழாக கட்டி தூக்கி தம்மை இரண்டு
தடவைகள் சித்திரவதை செய்ததாக நிசாந்த டி சில்வாவால் பாதிக்கப்பட்ட ஒருவர்
குற்றஞ்சாட்டுகின்றார்.
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியாக இருந்த பிரசன்ன டி
அல்விஸ் என்பவரும் வழக்கு தொடுநர்களால் பெயர் குறிப்பிடப்படுகின்றார். இவர் சித்திரவதை
செய்த உத்திரவிட்டதாகவும் சில சமயங்களில் சித்திரவதையில் பங்கெடுத்ததாகவும்
குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இவர் கோத்தபாயவிடமிருந்து நேரடியாக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டார் எனவும்
சொல்லப்படுகின்றது.
“குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் பொலிஸ் படையில் முக்கிய விசாரணைப் பொறுப்புகளில்
தொடர்ந்தும் இருப்பதானது இலங்கைக்குள் ஏன் நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளது என்பதைக்
காட்டுகின்றது” சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
“வெளிநாட்டில் ஒரு வழக்கினைக் கொண்டு வருவதே அவர்களுக்குள்ள ஒரேதெரிவாகும். இந்தப்
புதிய முறைப்பாடானது வவுனியா ஜோசப் முகாம், தலைநகர் கொழும்பு மற்றும்
புல்மோட்டையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு நிலையம் உள்பட்ட
இராணுவ முகாம்களில் 2008 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற
சித்திரவதைகள் பற்றிய விரிவான குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளது.
இந்த முறைப்பாடு மேலும் இராணுவப்புலனாய்வு, குற்ற விசாரணைத் திணைக்களம், பயங்கரவாத
விசாரணைப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வு சேவை உட்பட பொறுப்புவாய்ந்த பல்வேறு அரச
முகவர் அமைப்புக்களையும் அடையாளங்காட்டுகின்றது.
வித்தியா ஜெயக்குமார் என்ற புனைபெயரின் கீழ் ராஜபக்ச மீது வழக்குத் தொடரும் ஒரு தமிழ்
வழக்குதொடுநர் 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் இராணுவ முகாம்களில் தான் 3
ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார்.
முதல்நாள் இரவு பெண் சிங்கள இராணுவத்தினர் தமது கட்டளையதிகாரியான மேஜர் முனதுங்க
மிருகனத்தனமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவரை கட்டிலுடன் கட்டினார்கள்.
இவர் பின்னர் ஒரு இராணுவ முகாமில் இளம் தமிழ்ப் பெண்கள் குழுவினருடன் தடுத்து
வைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு ஒவ்வொருநாள் இரவும் கடமை முடித்துவிட்டு வரும் இராணுத்தினர் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு ஒரு பெண்ணை தெரிவு செய்வார்கள்.
இவர் பின்னர் ஒரு பொலிஸ் தலைமையகத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அத்துடன்
இன்னுமொரு இராணுவ முகாமில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்குள்ளானார். அவரைப்
பிடித்து வைத்திருந்தவர்கள் கர்ப்பமாவதைத் தடுப்பதற்காக இவருக்கும் ஏனைய பெண்களுக்கும்
கருத்தடை ஊசிகளை பல்வேறு இடங்களில் வைத்து போட்டார்கள்.
“உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்”
என இந்த வழக்கினை தாக்கல் செய்த கோஸ்பீல்ட் நிறுவனத்தின் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்கொட்
கில்மோர் தெரிவித்தார்.
எமது கட்சிக்காரர்களுக்கு எதிராக கோத்தாபயவின் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட பாலியல்
வன்முறைகளும் அத்துடன் குற்றமிழைத்தவர்களை ஒட்டுமொத்தமாக தண்டனைகளிலிருந்து
பாதுகாப்பதும் பாலியல் வன்புணர்வு என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் பகுதியாக
இலங்கையில் இருந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது”.
“இந்த வழக்கிற்கு முன்வந்த றோய் இனதும் மற்றும் ஆண்கள் பெண்கள் என புதிய பத்து வழக்குத்
தொடுநர்களினதும் மிகப் பெரிய துணிச்சலுக்கு நான் மரியாதை செய்ய விரும்புகின்றேன்” என
கோஸ்பீல்ட் இன் தலைவர் மிச்சேல் கோஸ்பீல்ட் தெரிவித்தார்.
“இந்த அதிர்ச்சியான அனுபவங்களை மீளநினைவுபடுத்தி எங்களுடைய வழக்கறிஞர்களுக்கு சொல்லுதல்
என்பது இதில் பங்பெடுத்த எல்லோருக்கும் மிகவும் கடினமானதாக இருந்தது. அத்துடன்
அவர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையுடன் அவர்கள் இப்பொழுது நடத்தப்படுவார்கள் என்பதை
உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைப்பதற்கும் நாங்கள் எங்களால் இயன்ற
அனைத்தையும் செய்வோம்” என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

