யாழில் பேஸ்புக்கில் விளம்பரம் செய்து சற்குணராசாவைக் கொலை செய்த போலி வைத்தியர் டினேஸ்!!
யாழ்ப்பாணத்தில் அக்குபஞ்சர் தொடர்பாக, சமூகவலைத்தளங்களில் விளம்பரம் செய்து பலரின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளான் டினேஸ் எனும் இந்த போலி வைத்தியன். சுரபி எனும் பெயரில் யாழ் பிரவுண் வீதியிலும் மற்றும் சில இடங்களிலும் இவன் போலி மருத்துவராக இருந்துள்ளான். இவனது அக்குபஞ்சர் வைத்தியத்தால் அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா எனும் 64 வயதானவர் உயிரிழந்துள்ளார்.
முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உடற்கூற்று பரிசோதனையின் போது , அக்குபஞ்சர் சிகிச்சை என தவறான முறைகளில் செலுத்தப்பட்ட ஊசிகள் மூலம் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டு , அவை உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
மூட்டுவாதத்தை குணப்படுத்துவதாகவும் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கொடுப்பதாகவும் கூறி சமூகவலைத்தளங்களில் இவன் விளம்பரம் செய்து ஏராளமானவர்களை தன்னிடம் வரவழைத்து பெரும் பணம் பெற்று போலிச் சிகிச்சைகள் அளித்து வந்துள்ளான். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை இலக்கு வைத்தும் இவன் செயற்பட்டு வந்ததால், புலம்பெயர் தமிழர்களும் இவனிடம் பெருமளவு பணம் கொடுத்து சிகிச்சை பெற்று சின்னபின்னாமாகியுள்ளார்கள். இவனது சிகிச்சையால் பலர் நடைப்பிணமாக வாழ்வதாகத் தெரியவருகின்றது.
இவனது சிகிச்சை நிலையத்தில் வேலை செய்யும் யுவதிகள் மற்றும் பணியாட்கள் எவரும் பயிற்றப்படாத 3ம் தரத்தைச் சேர்ந்தவர்கள். இவனது இடத்துக்கு சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு குறித்த பணியாட்களும் ஊசிகளை கண்டபடி ஏற்றி சிகிச்சை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
50 வயதான இவன் பல கலியாணங்கள் கட்டியும் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். தற்போது 24 வயதான யுவதியுடன் வாழ்வதாகவும் தெரியவருகின்றது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் சில பெண்களிடத்தில் தவறான முறையில் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் சாப்பாட்டுக்கடைகளுக்குள் அதிரடியாகப் புகுந்து விளையாட்டுக்காட்டும் யாழ் மாவட்ட சுகாதாரப் பிரிவு, இவ்வாறான போலி வைத்தியர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லையா? வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, இவ்வாறானவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு சாப்பாட்டுக்கடை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பது என்றால் எத்தனையே இடத்தில் பதிவு செய்து சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டே சாப்பாட்டுக்கடைக்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவ்வாறான போலி வைத்தியர்கள் மிகச் சுலபமாக பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்கையில் விளையாடுவதுடன் பெருமளவு பணத்தையும் கொள்ளையடித்துச் செல்வதற்கு சுகாதாரப் பிரிவும் அனுசரனை வழங்குகின்றதா?
தற்போது இவன் தனது பேஸ்புக்கை முடக்கி வைத்துள்ளான். அத்துடன் இவனை பிரபலப்படுத்திய சில யூரியுப் வெங்காயங்களும் தங்களது யூரியூப் தளத்திலிருந்து இவன் தொடர்பான வீடியோக்களை அகற்றியுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது யூரியூப்பர்கள் மற்றும் சமூகவலைத்தள பிரமுகர்களின் தகவல்களை வைத்து இவ்வாறான போலி வைத்தியர்களிடம் சென்று உங்களது உடல், உளச் செயற்பாடுகளை நாசமாக்குவதுடன் பணத்தையும் இழந்து படுக்கையில் கிடக்க வேண்டாம்.



