யாழ் தனங்களப்பில் காா் மோதி இருவர் படுகாயம்!!
சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இன்று (26) மாலை நிகழ்ந்த விபத்து சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். மாலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஏ 32 வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, தனங்கிளப்பு சந்திக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரை மோதியது.
இதில் துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரும் காயமடைந்தனர். இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

