Home புதினங்களின் சங்கமம் சிவபூமி முதியோர் இல்லத்தின் முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணம்!

சிவபூமி முதியோர் இல்லத்தின் முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணம்!

S

யாழ்ப்பாணம் தொல்புரத்தில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லத்தின் முதியவர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருடைய சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரி இன்று யாழ்.போதனா வைத்தியாலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதன் போது அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய பொன்னையா சத்தியகுணசேகரன் என்று தெரியவந்துள்ளது.