புதினங்களின் சங்கமம்

அரச பேரூந்து சேவையை கொச்சைப்படுத்தியதாம் யாழ் பாடசாலை!! நடந்தது என்ன? Photos

யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.

இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் இல்லம் ஒன்று விளையாட்டு போட்டியில் அமைக்கப்பட்டிருந்தமை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்த பாரதி இல்லம் அலங்கரிப்பிலும் முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இதில் பாரதி இல்லம் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான மாதிரியை இல்லமாக அலங்கரித்திருந்தது.

காங்கேசன்துறை- யாழ்ப்பாணம் 769 வழித்தடங்களில் பயணிக்கும் அரச பேருந்து ஒன்று நடைபாதையில் மாணவர் ஒருவரை மோதி தள்ளுவதை சித்தரிக்கும் முகமாக இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற சாரதிகளால் இவ் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை சுட்டிக்காட்டும் விதமாக இவ் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை குறித்த அலங்காரத்திற்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார்கள் அரச பேரூந்து நிர்வாகத்தினர். அவர்களின் அறிக்கை இங்கு தரப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில், இலங்கை போக்குவரத்துசபையை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியமைக்கு இலங்கை போக்குவரத்துசபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துசபையின் யாழ் சாலை முகாமையாளர், இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

May be an image of ticket stub and text
May be an image of 9 people and textMay be an image of 8 people and textMay be an image of 9 people and textMay be an image of 9 people and crowdNo photo description available.