புதினங்களின் சங்கமம்

அதி வேகம்! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீசாரின் ஜீப் வண்டி தலைகீழாகத் தடம் புரண்டது! வீடியோ

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் நிலையத்துக்குரிய பொலீஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு உள்ளது. 11-03-24 இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலீஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி பயணித்த வாகனம் தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி புரண்டுள்ளது.இதன்போது சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.விபத்து தொடர்பாக மாங்குளம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.