புதினங்களின் சங்கமம்

தனது லீலைகளை அம்பலப்படுத்திய சுபாவை துாக்கினார் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்!!

வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுபாவின் காணொளி அண்மையில் வெளியாகி இருந்த நிலையில் இவர் கல்வித் திணைக்களத்தில் இருந்து மாகாண கால்நடை உற்ப்பத்தி திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

திணைக்களத்துக்குள் நடந்த, நடக்கின்ற முறைகேடுகள் தொடர்பில் அண்மையில் சுபா அம்பலப்படுத்தி இருந்த நிலையில் சுபாவை உயர் அதிகாரிகளின் செல்வாக்கினோடு இவ்விடமாற்றத்தை வழங்கியுள்ளார் குயின்ரஸ்.

குறித்த பெண் மாகாணத்தில் இருந்தால் தனது லீலைகள் பல அம்பலமாகிவிடும் என கருதிய குயின்டர்ஸ் குறித்த பெண்ணிற்கு இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் பல முறைகேடுகள் இடம் பெறுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தனக்கு எதிரானவர்களை பழிவாங்கும் படலத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

இது தொடர்ந்தால் இவரது பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்த வேண்டி வரும்.