யாழ் போதனாவைத்தியசாலைக்குள் சற்றுமுன் குதித்ததுள்ளவர்கள் யார்?? ஊழியர்கள் கதி கலக்கம்!!
யாழ் போதனா வைத்தியசாலையில் கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர். வைத்தியசாலை நிதி விவகாரங்களை அக்குவேறு ஆணிவேறாக கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் இரண்டு பாரங்களாக கணக்காய்வு செய்து வருகிறார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பெயரில், பத்தரமுல்லவிலிருந்து பொதுக்கணக்காய்வு குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்.
கட்டட நிர்மாண, புனரமைப்பு உள்ளிட்ட சில விடயங்களில் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே, இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, கதிர்ச்சிகிச்சைவியலாளர், தொழில்நுட்பவியலாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் ஆளணி முற்றாக நிரப்பப்பட்ட நிலையில், பகலில் அவர்கள் அனைவரும செய்யும் கடமைகளை, இரவில் தனியொருவர் செய்வதாக கணக்கு காண்பிக்கப்பட்டு மேலதிக நேர கொடுப்பனவு பெறப்பட்டுள்ளது.
கனிணிவழி உடலுறுப்பு ஊடுகதிர் படப்பிடிப்பை (சி.ரி) இரவில் (ஓய்வுநேர கடமையில்) மேற்கொண்டால், எக்ஸ் கதிர் படப்பிடிப்பில் கிடைக்கும் தரகுப்பணத்தை விட பத்து மடங்கிற்கும் அதிக தரகு பணம் கிடைக்கிறது. இதனால் பகலில் சி.ரி படப்பிடிப்பை மேற்கொள்ளாமல் இரவில் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒவ்வொரு விடுதியாக சென்று, எக்ஸ் கதிர் படப்பிடிப்பு மேற்கொண்டவர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது.