”துண்டை விரித்து பிச்சை எடுங்கோவன்” வவுனியா கனகராஜன்குளத்தில் போக்குவரத்து பொலிசாரை கிழித்து தொங்கவிடுபவர் யார்? வீடியோ
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களை பிடித்து தவறான வழக்குகளை அவர்கள் மீது போட்டு பணத்தை பறிக்கும் பொலிஸாரின் காணொளியை நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் வவுனியாவில் பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரை வழிமறைத்து வேகமாக சென்றதாக கூறி வழக்கு பதிவு செய்து பொலிஸார் பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட நபர் தன் தரப்பு வாதத்தை எவ்வளவே நிரூபிக்க முயன்றும் குறித்த பொலிஸார் வழக்கை பதிவு செய்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட நபர் நான் இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு சென்று பார்த்துகொள்ளவதாக தெரிவித்துள்ளார்.பொலிஸ்காரர்களில் ஒருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞன் என்பதும் மற்றையவர் சிங்களவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.