உடல் மற்றும் கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி.!!

 

சத்துக்குறைவான உணவு, மதுபான பழக்கம் காரணமாக ஏற்படும் ஈரல் வீக்கத்தை குணப்படுத்த பப்பாளி விதைகள்!

முதுமையடைகிறபோது நம் உடம்பில் உள்ள, இயற்கையான ரசங்கள் குறைந்த அளவே சுரக்கும். அதனால் முழுமையாக ஜீரணிக்க முடிவதில்லை. இதனால் வாயுத்தொல்லை, நெஞ்சு எரிச்சல், உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். அப்போது பப்பாளியிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடலாம்.

பாப்பெய்ன் ரத்தத்தின் உறைவுத்தன்மையை உண்டாக்கும். ரத்தம் வெளியேறும் நிலையில், இழப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டது. ஈரல் வீக்கம், மூலஉபாதைகளுக்கு பப்பாளி மிக சிறந்த மருந்தாகும். இது தவிர வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி கை கொடுக்கும்.

பப்பாளி விதை ஒருவழியாக நாம் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக்கொண்டு பப்பாளியை சாப்பிட்டாலும் முதலில் அதன் விதைகளை வழித்துத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. நாம் ஏன் கட்டாயம் பப்பாளி விதையைச் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

பப்பாளியில் மிக அதிக அளவில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் கல்லீரலில் உள்ள இழைநார்கள் சரியாக வளர்ச்சியடைய பப்பாளி விதை உதவும். கல்லீரல் வீக்கம் போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட அத்தனை வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது.

⭕️ தினமும் பத்து முதல் 15 பப்பாளி விதைகளை எடுத்து நசுக்கி சாறாகவும் பயன்படுத்தலாம். அல்லது அரைத்து காய்கறிகளுடன் சேர்த்தோ சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

⭕️ சிறுநீரகக்கற்கள் கரையும்

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கிறது என்று கராச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி, சிறுநீரக நச்சுக்கள் தொடர்பான நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக பப்பாளி விதை அமைகிறது.

⭕️ பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளை அழிக்கும்

பப்பாளி விதை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் தென்மை கொண்டது. அதனால் மூட்டுவலி தொடர்புடைய பிரச்னைகள், பக்கவாதம், வீக்கம், வலி, வீக்கத்தால் சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்னைகளை நீக்கும். குறிப்பாக,பாக்டீரியா மற்றும் வைரஸால் உண்டாகும் நோய்க்கிருமிகளைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.

⭕️ ஜீரண சக்தியை மேம்படுத்தும்

பப்பாளி காயிலுள்ள விதை மற்றும் பழத்தின்விதை இரண்டிலுமே மிக அதிக அளவில் என்சைம்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவற்றில் பாபைன் என்னும் என்சைம்அதிகமாக இருக்கிறது. அதனால் இது உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆனால் கர்ப்பிணிகளும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பவர்களும் அந்த குறிப்பிட்ட காலகட்டங்களில் பப்பாளி விதை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

⭕️ புற்றுநோயைத் தடுக்கும்

பப்பாளி விதையில் உள்ள மூலப்பொருள்கள் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகள் வளர்ச்சியடையாமல் தடுக்கும். இதிலுள்ள வேதிப்பொருள் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சருமப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் தன்மை கொண்டது.

⭕️ ஆண்மையை அதிகரிக்கும்

ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை நீக்கும் ஆற்றல் பப்பாளி விதைக்கு உண்டு. இதில் அதிக அளவு புரோட்டீன் அடங்கியிருக்கிறது. பப்பாளி விதை ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

மூன்று வாரம் தொடர்ந்து பப்பாளி விதையை கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தாலே போதும். உங்கள் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள்.

💢💢💢 எப்படி சாப்பிடுவது

பொதுவாக பப்பாளி விதை சிறிது கசப்பாகவும் சிறிது காரத்தன்மையுடனும் இருக்கும். அதனால் தான் மிளகுடன் பப்பாளி விதை கலப்படம் செய்கிறார்கள்.

பப்பாளி விதையை சாப்பிடுவதற்கு சில முறைகளை கையாளுங்கள். சாப்பிடுவதும் எளிதாகும். பலன்களும் முழுமையாகக் கிடைக்கும்.

💢💢💢ஆரம்ப நாட்கள்

பப்பாளி விதை சாப்பிட ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் சிறிய சைஸ் பப்பாளியை எடுத்துக்கொண்டு, அதன் சில விதைகளை மட்டும் எடுத்து அப்படியே சாப்பிட ஆரம்பியுங்கள். சிறிய சைஸ் பப்பாளியை எடுத்துக் கொண்டால், நன்கு முற்றாமல் இளம் விதைகளாக இருக்கும். கசப்புத்தன்மையும் குறைவாக இருக்கும்.

💢💢💢மூன்று வாரங்கள்

இரண்டு நாட்கள் சாப்பிட ஆரம்பித்ததும் உங்களுக்குப் பழகிவிடும். அதன்பின் விதையை எடுத்து நன்கு அரைத்து கால் ஸ்பூன் அளவுக்கு சாப்பிட ஆரம்பியுங்கள். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்துங்கள். இரண்டாவது வாரம் அரை ஸ்பூன் அளவுக்கும் மூன்றாவது வாரத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கும் சாப்பிட வேண்டும்.

மிளகுக்கு மாற்றாக

நீங்கள் மிளகை எந்தெந்த உணவில் பயன்படுத்துகிறீர்களோ அதில் மிளகுக்கு பதிலாக இந்த பப்பாளி விதைகளை நசுக்கிப் பயன்படுத்தலாம். மிளகின் அதே சுவையை இந்த விதைகளும் உங்களுக்குக் கொடுக்கும்.

சாலட், சூப், இறைச்சி ஆகியவற்றுடன் இந்த விதைகளை அரைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் ஸ்மூத்தி போன்ற இனிப்பான பதார்த்தங்களோடு சேர்க்காதீர்கள். அது கொஞ்சம் கசப்புத்தன்மையைக் கொடுக்கும்.

 

பப்பாளி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

பப்பாளி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

பப்பாளி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு மற்றும் வடிவத்திற்கு உதவுகிறது. முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக் காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

பப்பாளி பழத்தில் கரோட்டீனாய்டுகள், ப்ளோனாய்டுகள், வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

பப்பாளிபழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது.

error

Enjoy this blog? Please spread the word :)