புதினங்களின் சங்கமம்

சாந்தனின் உடல் விமானநிலையத்தில்!! அவர் உயிர் பெற்றால் மாத்திரமே விமானநிலையத்தை விட்டு வெளியே வரலாமாம்!! நடப்பது என்ன?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 33 வருடம் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையான சாந்தன் என்ற ரி.சுரேந்திரரஜாவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், சடலத்தை இலங்கையில் பெறுபவரின் பெயரில் சாந்தனின் (ரி.சுரேந்திரராஜா) பெயரே குறிப்பிடப்பட்டுள்ளதால், இன்று மாலை வரை விமான நிலையத்திலிருந்து சடலத்தை வெளியே கொண்டு வருவதில் தாமதம் நிலவுகிறது. இது தொடர்பாக சாந்தனது தம்பி மதிசுதா தனது சமூகவலைத்தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

”ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இந்த ஆவணங்களுடனும் அதிகாரிகளுடனும் போராட வேண்டியுள்ளது.
சாந்தனின் உடலை பொறுப்பேற்க வேண்டியவரது சகல ஆவணங்களுடன் மைத்துனர் விமானநிலையத்தில் காத்திருக்கிறார்.
ஆனால் Air bill இல் பெற வேண்டிய பெயரில் இறந்தவரின் பெயரை போட்டு விட்டதால் அவரே வந்தால் தான் பெறலாம் என்ற நிலையில் அந்த பற்றுச் சீட்டை மீள் திருத்துவதற்காக 4 மணித்தியாலமாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.”
No photo description available.
May be an image of ticket stub and text