பொலிதீன் உறையில் பிணமாகச் சென்ற ஒரு இளைஞனின் இறுதிப் பயணம். (வைத்தியரின் குறிப்பு)
18 நாட்களுக்கு முன்னர் PCR Positive ஆனதனால் மூச்சு எடுப்பதற்கு ஏற்பட்ட
சிரமம் காரணமாக அந்த 33 வயது இளைஞன்
Covid ICU விற்கு உட்படுத்தப்படுகிறான்.
ஓரிரு நாட்களில் சாதாரன வாட்டிற்கு கொண்டு
வந்துவிடமுடியும் என்று நாம் அனைவரும்
நம்பினோம்.
“எனக்கு அவசராமாக வீட்டிற்கு செல்ல முடியும்தானே ” என்று அடிக்கடி கேட்பதுடன்
அவன் இல்லாவிட்டால் அவனது அன்பு மனைவியினதும்,ஒரே மகனினதும் எதிர்காலம்
என்ன ஆகும் என்பதையும் ஞாபகப்படுத்திக்
கொண்டே இருந்தான்.
சகல சிகிச்சைகளும் குறை எதுவுமில்லாமல்
நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
Ventilator Support இல்லாமல் மூச்ச எடுக்க
முடியாத நிலைக்கு தல்லப்பட்டுக் கொண்டு
இருக்கும் பொழுதுகூட ஓரிரு இரு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக போட்டுக் கொண்டு இருக்க முடியாத தலை இருகும் வரை
கடிடனமான Ventilator CPAP Mask கை அந்த இளைஞன் தொடர்ச்சியாக 48 மணி நேரங்கள்
போட்டுக் கொண்டு இருந்ததற்குக் காரணம்
மூச்சு நின்றுவிடும் என்ற அச்சம் காரணமாக
இருக்கலாம்.
இன்னும் ஒரு நாள் அந்த இளைஞனின் நிலமை
இருந்ததைவிட மோசமாகிக் கொண்டு இருந்தது.
கண்ணீருக்கு மத்தியில் மிகக் கடினமாக மூச்சு
எடுப்பதை நாம் உணர்ந்தோம்.
பின்னர் கடைசி முயற்சியாக Intubate செய்வதற்கு தயாராகினோம்.
அந்த நேரத்தில் அந்த இளைஞன் கண்ணை
மூடும் பொழுது அவனது உணர்வுகள் எப்படி
இருந்து இருக்கும்…
இன்னும் மூன்று நாட்கள் மருத்துவ உபகரணங்களின் உதவியிடன்
உயிருக்குப் போரடினான். ஆனால் அந்த மூன்றாவது நாள் எமது முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் அந்த இளைஞன்
இந்த உலகைவிட்டுப் பிரிந்துவிட்டான்.
அந்த நேரத்தில் கடமையில் இருந்த நம்
அனைவரதும் கண்களில் கண்ணீர் கொட்டிக்
கொண்டு இருந்தது. அவனுக்காக நாம் செய்த
எதுவுமே கடைசியில் பலநளிக்கவில்லை.
அவனது மனைவியின் அழுகுரல் எமக்கு இன்னும்
கேட்டுக் கொண்டு இருக்கிறது…
அவனது மகன் தந்தை வரும்வரை எதிர்பார்த்துக்
காத்திருகக்கூடும்.
அந்த இளைஞனுக்குப்போலவே
நம் யாரை வேண்டுமானாலும் இந்த
கொரோனா வந்து தாக்கலாம்.
உங்களது அன்புக்குறியவர்களை நினைத்தேனும்
கவனமாக இருக்கவும்.
நம் அனைவருக்கும் இறைவன் துனைபுரியட்டும்.
#சிந்தித்து #செயலாற்றுவோம்,
(பிரதி செய்யப்பட்ட பதிவு)

