புதினங்களின் சங்கமம்

யாழில் பொச்சுமட்ட ஏற்றி மதிலை உடைத்துக் கொண்டு புகுந்த வாகனம்! புகைப்படங்கள்

பொச்சு மட்டைகளை ஏற்றி வந்த பட்டா வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து பொச்சு மட்டைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No photo description available.May be an image of off-road vehicle and jeep