கண்டி சிங்கள கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் உறவு!! பெருமளவு பணம் சுருட்டிய யாழைச் சேர்ந்த பல்கலை மாணவன்!!
கண்டியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு, வர்த்தகரின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை, அவரது மனைவி மூலமாக பல தடவைகள் பெற்றுக் கொண்ட, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவர் தொடர்பாக, பொலிஸ் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவு வெளியாகியுள்ளது. குறித்த இளைஞன் பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் என்பதுடன் அப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அணி ஒன்றிலும் இடம்பெற்றுள்ளார்.
கட்டுக்கஸ்தோட்ட பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றிற்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்று வந்த போதே கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியின் அறிமுகம் கிடைத்துள்ளது. வர்த்தகர் வியாபார நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்ற வேளைகளில் வர்த்தகரின் மனைவியும் யாழ்ப்பாண மாணவனும் பல இடங்களுக்கு தனிமையில் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவ்வாறான வேளைகளில் வர்த்தகரின் மனைவியின் பண அட்டை மூலம் பல்வேறு இடங்களில் ஏரிஎம் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லீசிங் அடிப்படையில் மனைவியின் பெயரில் பல லட்சம் ரூபா பெறுமதியான ஆண்களுக்கான நவீன மோட்டார் சைக்கிள் மற்றும் பல பொருட்களும் வாங்கி இளைஞன் பாவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. காசோலைகள் மூலமாகவும் இளைஞன் பணம் பெற்றுளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்று திரும்பிய வேளைகளில் மனைவியின் நடத்தையில் சந்தேகமிருப்பதாக வர்த்தகரின் சகோதரி தெரிவித்த முறைப்பாடுகளை அடுத்து வர்த்தகர் மனைவியின் நடவடிக்கைகள் மற்றும் பண கொடுக்கல் வாங்கல்களில் கவனம் செலுத்திய போதே பெருமளவு பணம் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏரிஎம் களிலிருந்து எடுக்கப்பட்டுள்தை அறிந்துள்ளார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே மனைவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனது மனைவியை வசியப்படுத்தி உறவு கொண்ட பின்னர் அதனை வீடியோவாகப் பதிவு செய்து மனைவியை அச்சுறுத்தி பல தடவைகளில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகாமான பணத்தை இளைஞன் பறித்துள்ளதாக கூறி பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக சிங்கள சமூகவலைத்தளத்தில் பதிவு வெளியாகியுள்ளது.

