இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

உணவு வைத்திருப்பதாக நினைத்து இளைஞரை கடித்துக் குதறிய குரங்குகள்!

உத்தரப்பிரதேசத்தில் உணவு வைத்திருப்பதாக நினைத்து குரங்குக் கூட்டம் ஒன்று இளைஞரை விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

விருந்தாவன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நிகுன்ஞ் கோயல் என்பவர் தனது நண்பரைப் பார்ப்பதற்கு கடைக்குச் சென்றிருந்தார்.

கடையிலிருந்து திரும்பிய கோயலிடம் உணவுப் பொருள் இருப்பதாக நினைத்த குரங்குக் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி வளைத்து தாக்கியது.

நகங்களால் பிறாண்டியும், கடித்தும் அவரைக் காயப்படுத்தின. இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற கோயல் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கோயல் தாக்கப்படும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.