முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில் தனுஜன் என்பவரது வீட்டில் இன்று காலை 11 30 மணிக்கு காஸ் லீக் ஆனதில் வீடு தீக்கிரை ஆகியுள்ளது.
இதன் போது வீட்டில் இருந்து எந்தவித உடமைகளும் மீட்க முடியாத அளவில் அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன
வீட்டில் சமையலுக்காக வாங்கி வைத்திருந்த காஸ் லீக் ஆகி வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்தபோது அயலவர்களின் உதவியை நாடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டபோதும் உடமைகள் எவற்றையும் காப்பாற்ற முடியாத அளவுக்கு தீ பரவி உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.
இருப்பினும் உயிர்ச்சேதங்கள் காயங்கள் எதுவும் இன்றி வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறி உள்ளார்கள் இந்த சம்பவத்தின் வீட்டிலிருந்த மடிக்கணணி தொலைக்காட்சி வானொலி பெட்டி வீட்டுத்திட்ட ஆவணங்கள் காணி ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் பணம் நகை என்பனவும் எரிந்து சாம்பலாகி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





