புதினங்களின் சங்கமம்

மாணவர்களை பிரம்பால் அடித்து பூசை செய்த சங்கீத ரீச்சர் தொடர்பாக பொலிசார் விசாரணை!!

கரந்தெனிய, திவித்துரவத்த தமிழ்ப் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் 12 மாணவர்களை பெண் ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தாக்கியதில் மாணவி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறுமியின் தந்தை எல்பிட்டிய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர் சங்கீத ஆசிரியை. அவர் பாடவேளையில் வகுப்புக்கு சென்றிருக்கவில்லையென்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றொரு ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் சங்கீத ஆசிரியையின் தங்குமிடத்துக்கு சென்று அவருக்கு பாடத்தைப் பற்றி நினைவூட்டினர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை பிரம்பு எடுத்து மாணவர்களை தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.