Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவில் JK Dreams Studio முதலாளி ஜெயம் கஜானனின் சிறுமிகள் மீதான பாலியல் இச்சைக்கு மனைவியும் துணையா?? நடந்தது என்ன?

13 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமி கொடுத்த வாக்குமூலத்துக்கு அமைய யாழ் கொக்குவில் JK Dreams Studio முதலாளி ஜெயம் கஜானன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியான சிறுமியை பல தடவைகள் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கஜானன் கைது செய்யபட்ட பின்னர் தனது ஒன்றுவிட்ட தங்கையின் நடத்தை மிகவும் கேவலமானது என கஜானனின் மனைவி தனது தங்கையின் புகைப்படங்களை அந்த ஸ்ரூடியோவில் வேலைசெய்யும் உதவியாள் மூலமாக சமூகவலைத்தளங்களில் பரவவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து மனைவியும் பொலிசாரால் பிடிக்கபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் உதவியாளும் பொலிசாரின் பிடிக்குள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் தொழில் அதிபர், சமூகசேவகர் என்ற போர்வையில் பாலியல் குற்றங்கள் பலவற்றை கஜானன் மேற்கொண்டு வந்துள்ளது யாழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் உண்டுபண்ணியுள்ளது. இவன் நம்பி எத்தனையோ குடும்பங்கள் தங்கள் சிறுமிகளின் பூப்புனித நீராட்டு விழா , பிறந்தநாட்கள், மற்றும் இளம் தம்பதிகளின் வீடியோ சூட்டிங்குகள் என்பவற்றை எடுத்துள்ளார்கள். பாலியல் வக்கிர சிந்தனை உள்ள கஜானன் இந்த காட்சிகளை எப்படியும் தனது கமரா மூலம் தவறான கோணத்திலும் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் இந்த JK Dreams Studio பேஸ்புக் பக்கத்தில் பல தம்பதிகள் மற்றும் யுவதிகளின் புகைப்படங்கள், வீடியோக்களையும் இவன் பிரசுரித்தும் வந்துள்ளான். இவற்றை எல்லாம் அந்தப் பக்கத்தில் இருந்து உடனடியாக அவனது ஊழியர்கள் அகற்றுவார்களா??

தனக்கு தொழில் போட்டி உள்ளது என்றும் தனது முகப்புத்தகம் பலதடவைகள் ஹக் ஆகியதாகவும் இவன் பலரிடம் கூறிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இவன் எதற்காக இவ்வாறு கூறினான் என தற்போது அனைவரும் அறிந்துள்ளார்கள்.