யாழில் நடிகை தமனாவுடன் ஒன்றாக இருப்பதற்கு மணித்தியாலத்திற்கு 30 ஆயிரம்!! ரம்பாவின் கணவன் இந்திரன் தரகர் வேலை!!
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை யாழில் ஆரம்பித்துள்ள நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன், குறித்த நிறுவனத்துக்காக யாழ் மண்ணில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
பாடகர் ஹரிகரனின் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நாளை மறுதினம் யாழ். முற்றவெளியில் நடைபெறவுள்ளதாக கடந்த பல மாதங்களாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்து வருகின்றனர்.
தற்போது ஒருதொகுதி கலைஞர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், குறிப்பாக தமன்னா, யோகிபாபு, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்களை சந்திப்பதற்காக ஒரு நிகழ்வை நாளை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒரு மணித்தியாலம் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு நுழைவுக்கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் அறவிடுகிறார்கள்.
நுழைவுச்சீட்டுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதிகள் அனைத்தும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள்.
தென்னிந்தியக்கலைஞர்களை அழைத்துவந்து தான் யாழில் உயர்கல்வி நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமா என்ற கருத்துக்கள் இருந்து வந்த நிலையில், தற்போது கலைஞர்களை சந்தித்து செல்பி எடுக்க, 30 ஆயிரம் கட்டணம் என்ற விடயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

