புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 5 பிள்ளைகளின் தந்தையான சசிவதனனின் பொறுப்பற்றதனம்!! ரயில் மோதியதால் சிதறிப் பலி!!

கிளிநொச்சியில் புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையில், பொறுப்பற்ற விதமாக வீதியை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

வீதியின் குறுக்கே இடப்பட்டிருந்த தடைக்குள்ளால் நுழைந்து சென்றவர், புகையிரதம் வரும் திசையை கவனிக்காமல், எதிர்த்திசையை மட்டும் பார்த்து விட்டு வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை புகையிரதம் மோதித்தள்ளியது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசமுத்தையா சசிவதனன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

May be an image of 2 people, train and textMay be an image of 2 people, train, motorcycle and textMay be an image of 7 people and motorcycle