யாழ் பல்கலைக்கழக மாணவி உசாவை 3 நாட்களாக முகாமுக்குள் வைத்து சீரழித்த இராணுவம்!! நிர்மலாவும் சித்தியும் எங்கே? வம்பனின் புலனாய்வுத் தொடர் 5
1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 5 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
நான்காம் பகுதி பகுதி கீழே
கைதடி மானிப்பாய் வீதியில் கைதடிச் சந்தியில் அமைந்துள்ள கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் வீட்டின் தற்போதய புகைப்படம்
கொடூர அரக்கர்கள் உலாவும் பிரதேசத்தில் கிருசாந்தி ஏன் தனியாக சென்றாள்….. ?
கிருசாந்தியின் அம்மா முத்துக்குமாரசாமி இராசம்மா 24.07.1937ம் ஆண்டு பிறந்தவர்.கிருசாந்தியின் அக்கா பிரசாந்தி 1975.05.20 ஆம் திகதி பிறந்தவர். கிருசாந்தி 21.11.1977ம் ஆண்டு பிறந்தவள். கிருசாந்தியின் தம்பி பிரணவன்27.10.1979ம் ஆண்டு பிறந்தவன். கிருசாந்தியின் அக்கா பிரசாந்தி சம்பம் நடைபெற்ற காலப்பகுதியில் கொழும்பில் உயர் கல்வி கற்று வந்தாள். கிருசாந்தி ஏ.எல் பரீட்சை எடுத்த பின் குடும்பமாக கொழும்பில் சென்று குடியேற தீர்மானித்திருந்த போதே கொடூ சம்பவம் நடந்தது.
கொலையான கிருசாந்தி குடும்பத்தினரின் நிஜப் புகைப்படங்கள்
கொலையான கிருசாந்தி குடும்பத்தினரின் AI புகைப்படங்கள்
கிருசாந்தி பாடசாலை நாட்களில் தனது தம்பி மற்றும் நெருங்கிய உறவுகளான பாடசாலை மாணவர்களுடன் சேர்ந்தே கைதடியிலிருந்து பாடசாலைக்கு வருபவள். தாயார் தனியாக ஒருபோதும் அவளை பாடசாலைக்கு செல்ல விடுவதில்லை. அத்துடன் சுற்றிவளைப்புக்கள் குண்டு வெடிப்புக்கள் என யாராவது கூறினாலே பாடசாலைக்கு மகளைப் பாடசாலைக்கு செல்லவிடுவதில்லை.
கிருசாந்தியின் உறவினர்களான யாழ் மத்தியகல்லுாரி மாணவன் உருத்திரசிங்கம் தவபாலன் (தற்போது யாழ் பல்கலைக்கழக ஊழியர்) யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் நாகேந்திரம் சசிதரன் மற்றும் பலருடனேயே கிருசாந்தி பாடசாலைக்கு செல்வதும் மீண்டும் அவர்களுடனேயே பாடசாலை விட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
ஏ.எல் பரீட்சை காலப்பகுதி என்பதால் கைதடியிலிருந்து ஒரு சில மாணவர்களுடனேயே பாடசாலைக்கு பரீட்சை எழுதச் சென்றாள். செல்லும் போதே ஞானந்தியின் மரணம் கேட்டு அதிர்ச்சியுற்றே சென்று பின்னர் குறித்த பாதையால் வந்தாள். வழக்கமான இராணுவ முகங்களே அப்பகுதியில் காணப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே கிருசா்ந்தி கொடூர காமுகக் கொலைகாரர்களிடம் செம்மணியில் வந்து சிக்கினாள்….
அதன் பின்னர் நடந்தது என்ன என்பதை அடுத்த தொடரில் தருகின்றோம்….
பல அப்பாவிப் பெண்களையும் சிறுமிகளையும் காப்பாற்றத் தவறிய ஆண்மீகவாதிகள்..
இராணுவம் தென்மராட்சியை நோக்கி முன்னேறிய போது வன்னியிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக தென்மராட்சியில் வந்து தங்கியிருந்த பலர் படையினரின் கட்டுப்பாட்டுக்கள் தெரியாத்தனமாக மாட்டினார்கள். அவர்கள் அங்கிருந்து வலிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த மக்களுடன் மக்களாக அள்ளுண்டு வலிகாமத்திற்கு சென்றார்கள்.
இவர்களில் பல இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்கள், சிறுமிகள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் அடங்குவர். இவர்களில் சிலரிடம் அடையாள அட்டை உட்பட எந்தவொரு ஆவணங்களும் இருக்கவில்லை. இவர்களை படையினர் தேடித் தேடி வேட்டையாடிய தருணம்.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தர்மகர்த்தாவான சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியை சிலர் அணுகி அநாதரவான நிலையில் யாழில் மாட்டுப்பட்டிருக்கும் சில பெண்பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு கேட்ட போது அவர் மறுத்துவிட்டார். அவர் அதற்கு பல காரணங்களை கூறினார்.
அதே போல் யாழ் ஆயர் இல்லத்தையும் சிலர் அணுகி உதவி கேட்ட போது அவர்களிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஆயர் இல்லத்திற்குள்ளும் புகுந்தது இராணுவ ஓநாய்க் கும்பல்….
அங்கு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கற்பித்த ராஜி என்ற 22 வயது யுவதியை இராணுவம் கடத்திச் சென்ற பின்னரே ஆயர் இல்லம் விழித்துக் கொண்டது.
அதன் பின்னர் நடந்தது என்ன என்பதை அடுத்த தொடரில் தருகின்றோம்….
நிர்மலாவும் சித்தியும் எங்கே?
தென்மராட்சியிலிருந்து வேகமாக அள்ளுண்டு வந்த மக்களை நாவற்குழிப்பகுதியில் படையினர் மறித்து அக்குவேறாக பரிசோதித்த பின்னரே நாவற்குழிப் பாலத்தை தாண்ட அனுமதித்தார்கள். ஆனால் படையினர் அங்கு அடையாள அட்டைகளைப் நுணுக்கமாக பரிசோதிக்கவில்லை. வயதான சிலரை அம்மா, அப்பா, தாத்தா என கூறி நாவற்குழியைத் தாண்டி அடையாள அட்டை இல்லாது வலிகாமத்துக்குள் பலர் பிரவேசித்திருந்தார்கள்.
இவ்வாறு பிரவேசித்தவர்களில், யாழ் உடுவிலைச் சொந்த இடமாகக் கொண்டவர்களும் இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பகுதியில் வசித்து வந்தவர்களுமான 18 வயதான மாணவி நிர்மலா அவளது தாயின் சகோதரி 36 தேவநிதி ஆகியவர்களும் அடங்குவர். கச்சாய்ப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கிளாலிப்பாதையூடாக அவர்கள் வந்திருந்தார்கள். .
நிர்மலாவின் தாயின் மற்றுமொரு சகோதரியும் தேவநிதியின் தங்கையான ஒருவர் புலிகளின் சோதியா படையணி தளபதிகளில் ஒருவராக குறிப்பிடத்தக்க பதவியில் இருந்தார். படையினரின் கட்டுப்பாட்டுக்குள் மாட்டுப்பட்ட நிர்மலாவும் தேவநிதியும் யாழ் அரியாலை திருமகள் வீதியை சொந்த இடமாகக் கொண்ட வயதான தம்பதிகளுடன் சேர்ந்து வந்தார்கள். அந்த வயதான தம்பதிகளும் கச்சாயில் இவர்கள் வந்திருந்த உறவினரின் வீட்டுக்கு அருகில் அகதியாக வாழ்ந்து வந்தவர்கள். அவர்களுடன் வலிகாமத்திற்கு வந்த நிர்மலாவும் சித்தியும் தமது சொந்த இடமான உடுவிலுக்குச் சென்றால் அங்குள்ளவர்கள் தம்மை படையினருக்கு காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் குறித்த முதிய தம்பதிகளுடன் சேர்ந்து வாழ்நதார்கள்.
நிர்மலா க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில் கிளிநொச்சியில் 5 D , 2 C சித்திகள் பெற்று கிளிநொச்சி மகாவித்தியலயத்தில் கற்றுக் கொண்டிருந்தவர். அவர் அரியாலை வந்த பின்னர் அவரை எந்தவொரு பாடசாலையும் சேர்க்க மறுத்தது. காரணம் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் சேர்க்காத நிலையில் யாழ் ஸ்ரான்லிக் கல்லுாரியில் அப்போதைய அதிபராக இருந்த விநாயகன் மாணிக்கம் குறித்த மாணவியை மே மாத நடுப்பகுதியில் கல்லுாரியி்ல் இணைத்துக் கொண்டார். வசதிக் கட்டணம் மற்றும் வேறு தேவைகள் என கூறி அதற்காக அவர் பெற்ற தொகை அந் நேரத்தில் 4 ஆயிரம் ரூபாய்.
யூலை மாத தொடக்கத்தில் அரியாலைப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த மாணவி நிர்மலா மற்றும் சித்தியும் வேறு சிலரும் படையினரால் நீண்ட நேரம் விசாரிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர். அன்று இரவு வாகனத்தில் வந்த சிவில் உடைதரித்தவர்களால் 18 வயதான நிர்மலாவும் அவளது சித்தியும் கடத்திச் செல்லப்பட்டார்கள். இது தொடர்பாக அதிபர் மாணிக்கத்துடன் தொடர்பு கொண்டு நிர்மலா தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சிலர் கேட்ட போது அவர் மறுத்துவிட்டார்.
அதே நேரம் நிர்மலா தங்கியிருந்த வயோதிப தம்பதிகளும் குறித்த இருவர் தொடர்பாகவும் எந்தவித தேடுதல்களையும் மேற்கொள்ளாது விட்டார்கள். இ்ன்றுவரை நிர்மலாவும் தேவநிதியும் எங்கே என்று எவருக்கும் தெரியாது. ஆனால் குறித்த இ்ருவரும் கடத்தப்பட்ட செய்தி வெரித்தாஸ் மற்றும் புலிகளின் குரல், ஈழநாதம் போன்ற ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது.
உசாவுக்கு ந்டந்த கொடூரம்
அரியாலை புங்கங்குளம் இராணுவமுகாம் படையினரால் பிடிக்கப்பட்டு 3 நாட்களாக முகாமுக்குள் வைத்து கற்பழிக்கப்பட்டு 3 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக 4ம் வருட சிறப்பு பிரிவு மாணவியான உசா ( முழுப்பெயர் இதுவல்ல) வீட்டுக்குச் சென்று ஓரிரு நாட்களில் தற்கொலை செய்தாள். உசா பிடிபட்டவுடன் யாழ்பல்கலைக்கழகத்தின் உயர்பீடத்திற்கு தெரியப்படுத்தியதால் அடுத்தநாள் யாழ் பல்கலைக்கழக உயர்பீடத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் யாழ் நகரப் படை உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே உசா விடுவிக்கப்பட்டாள்.
உசா பிடிபட்டது 1996ம் ஆண்டு யூலை மாதம் ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்தநாள் ஆடி அமாவாசை தினம் என்றதால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கற்றுக் கொண்டிருந்த உசா தனது சொந்த ஊரான நுனாவில் பகுதிக்கு சைக்கிளில் செல்லும் போது அரியாலை புங்கங்குளம் முகாம் சோதனைச்சாவடியில் மறிக்கபபட்டாள்.
அரியாலை இராணுவத்தின் கேவலமான நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே அறிந்திருந்த உசா, சாவகச்சேரிப் பகுதியிலிருந்து யாழில் உள்ள ஒரு தபாலகத்திற்கு வந்து செல்லும் தபால் ஊழியர் ஒருவருடனேயே தனது வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு காதலனும் உண்டு. (உசாவின் காதலன் தற்போது ஆசிரியர்.வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவரது பிள்ளைகளில் ஒருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது) இருவரும் 1969ம் ஆண்டு பிறந்தவர்கள். உசாவின் தந்தை இறந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் ஆவணி மாத இறுதியில் நல்லுார் திருவிழா பூங்காவனம் அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந் நிலையிலேயே உசா புங்கங்குளம் படையினரால் மறிக்கப்பட்டாள்.
உசாவை புங்கங்குளம் இராணுவ முகாம் சோதனைச்சாவடியி்ல் மறிந்தது நாம் ஏற்கனவே முன்னைய தொடரில் கூறிய இராணுவ லெப்டினன் கேணலே. இவன் தொடர்பாக எந்தவொரு விசாரணை அறிக்கையிலும் தகவல்கள் இல்லை. ஆனால் இவனே அரியாலையில் மிகக் கொடூர செயற்பாடுகளைச் செய்த முக்கிய கொலையாளி. புங்கங்குளம் பகுதி முகாமிற்கு இவன் வருவதென்றால் எல்வ் ரக வாகனத்திலேயே வருவான். அந் நேரம் அந்த முகாம் பகுதி கூடிய பாதுகாப்புடன் காணப்படும். அத்துடன் இவன் பல படையினருடன் மாலை வேளைகளில் வீதியால் நடந்தோ அல்லது சைக்கிளிலோ சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டவன். இவனே கொட்டுக்கிணற்றடி சித்தரவதை முகாமின் முக்கிய சூத்திரதாரி.
சிவில் உடையில் அரை காற்சட்டை, ரீசேட்டுடன் நின்றே உசாவை மறித்தான். உசாவுடன் கூடச் சென்ற தபால் ஊழியல் உசாவை மறித்தவுடன் தானும் நின்றார். அவரை கலைத்து துரத்தியுள்ளார்கள் படையினர். உடனடியாக அவர் மாம்பழம் சந்தியால் வந்து திருநெல்வேலிப் பகுதியில் அவளது காதலனிடம் தகவலைக் கூற காதலன் அந்த முகாமுக்கு உடனே சென்றான். அவனையும் கொலை அச்சுறுத்தல் கொடுத்து துரத்தினார்கள் படையினர். அதன் பின்னரே காதலனால் பல்கலைக்கழக உயர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலை 6 மணியாகிவிட்டது. இனிமேல் படை அதிகாரிகளை சந்திக முடியாது என கூறிய உயர் பீடம் அடுத்தநாள் சனிக்கிழமை ஆடிஅமாவாசை விரதம் எல்லாவற்றையும் முடித்த பின்னர் மாலை 3 மணியளவிலேயே படை உயரதிகாரியை சந்தித்தது.
சந்தித்துவிட்டு வெளியே வந்த உயர் பீடத்தை உசாவின் காதலன் கேட்ட போது ”சிறிய விசாரணை நடக்கின்றது. நாளை வி்ட்டுவிடுவார்களாம் என உறுதியாக கூறுகின்றார்கள்” என கூறிவிட்டு சென்றுள்ளார் பல்கலைக்கழக உயர்பீடம். அடுத்தநாள் ஞாயிறு காலையிலிருந்து உசாவின் உறவுகள் 4 பேர் மற்றும் காதலன் குறித்த முகாமில் தவம் கிடந்தார்கள். பவள் கவசவாகனம் ஒன்று அரியாலை பகுதியிலிருந்து வந்து முகாமின் உள்ளே நுழைந்து சிறிது நேரத்தின் பின் மாலை 3 மணியளவில் உசாவின் சித்தி முகாமின் உள்ளே அழைக்கப்பட்டாள். சித்தியின் தோளைப் பிடித்தபடி நடக்க முடியாது தளம்பித் தளம்பி உசா வெளியே வந்தாள்.
உசாவின் காதலன் உசாவை அழைக்க அழைக்க உசா அவனைத் திரும்பியும் பாராது அழுதபடி உறவினரின் எம்.டி 90 மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றாள். உசாவின் காதலன் அடுத்தநாள் தென்மராட்சிக்கு சென்றுவரும் பாஸ் உள்ள மாணவன் ஒருவனிடம் கடிதம் கொடுத்து விட்ட போதும் உசா அந்த மாணவனை சந்திக்க மறுத்தாள். அதன் பின்னர் ஓரிரு நாட்களில் உசா தற்கொலை செய்து கொண்டாள். உசாவின் மரணச்சடங்கிற்கு சென்ற போது தாயார் கதறிக் கதறி கூறிய சில தகவல்களின் படி உசா கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளாள் என்பது பலருக்கும் தெரியவந்தது.
உசாவை அரியாலையில் படையினர் கைது செய்துள்ளார்கள். பல்கலைக்கழக உயர்பீடம் இராணுவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்ற தகவலை உதயன் பத்திரிகைக்கு தெரியப்படுத்தியும் அந்தத் தகவல் பத்திரிகையில் வரவில்லை். ஆனால் உசாவின் அந்தியேட்டி நினைவு தினம் மற்றும் ஆண்டு நினைவு தினங்களை பத்திரிகை பிரசுரித்திருந்தது.
படையினரால் கைது செய்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி தற்கொலை என்ற செய்தி அந் நேரத்தில் வெரித்தாஸ் வானொலி மற்றும் புலிகளின் குரல், ஈழநாதம் போன்ற ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளிவந்தது. ஆனால் உதயன்பத்திரிகை அதை வெளிவிடவில்லை.
1996ம் ஆண்டு கால நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட புலிகளின் இளம் போராளிகளின் கடும் சீற்றத்துக்கு உள்ளாக்கிய சில முக்கியஸ்தர்கள்….
1996ம் ஆண்டு மே மாத இறுதிப்பகுதி. புலனாய்வு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக 10கும் மேற்பட்ட இளம் போராளிகளைக் கொண்ட குழு ஒன்று புலிகளின் உயர் பீட உத்தரவுகளுடன் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதியான வலிகாமம் மற்றும் நகரப்பகுதிகளில் மக்களோடு மக்களாக சேர்ந்து செயற்பட்டதாக 2003 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்த புலிகளின் அரசியல் பிரிவினர் சில ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தனர். தென்மராட்சிப் பகுதியிலிருந்து மீண்டும் தமது இருப்பிடத்திற்கு வந்து குடியேறியிருந்த உறவினர்கள் மற்றும் பெற்றோருடன் குறித்த புலி உறுப்பினர்கள் சேர்ந்திருந்தனர். பெரும்பாலும் 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட குறித்த உறுப்பினர்கள் புலிகளின் உயர் பீட கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு தம்மை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினர். பலர் புலிகளில் சேருவதற்கு முன் படித்த பாடசாலைகளில் சென்று கற்கத் தொடங்கினர். அத்துடன் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடக்கும் செயற்பாடுகள் தொடர்பாக துல்லியமான அறிக்கைகளை தயாரித்து புலிகளின் உயர் பீடத்திற்கு வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
யாழுக்குள் ஊடுருவியிருந்த புலிகளின் கோபத்துக்கு உள்ளான வித்தியாதரன்….
வித்தியாதரனின் மிகக் கேவலமான தனிநபர் செயற்பாடுகள் ஒரு புறம் காணப்பட்டாலும் ஊடகத்துறையிலும் வித்தியாதரன் பயந்தாங்கொள்ளியாகவும் அதே நேரம் அந்தக் காலத்தில் உதயன் பத்திரிகையை வைத்து பெரும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவுமே பயன்படுத்தினார்.
1996 யூன் மாத இறுதிப் பகுதியில் யாழ் நாவலர் வீதியில் கைலாயபிள்ளையார் கோவிலுக்கு அருகில் மீண்டும் தொடங்கப்பட்ட உதயன் பத்திரிகை நிறுவனம், யாழ்ப்பாணத்தில் அந் நேரம் விளம்பர நோக்கத்திற்காகவே இயங்கியது. பிரதமஆசிரியராக காணமயில்நாதன் காணப்பட்டாலும் முற்று முழுதாக வித்தியாதரனே பிரதம முகாமையாளராக காணப்பட்டு உதயனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், பாலியல்வல்லுறவுகள், கொ்லைகள் போன்றவற்றை மிகத் துல்லியமான ஆதாரங்களுடன் குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு பலர் தெரியப்படுத்தியிருந்தாலும் எந்தவொரு தகவலும் உதயனில் பிரசுக்கப்பட மாட்டாது. பத்திரிகை தணிக்கை உள்ளது என கூறி தட்டிக்கழித்துவிட்டு செத்தவீடுகள் தொடர்பாகவும் கண்ணீர் அஞ்சலிகள் மற்றும் அந்தியேட்டி தொடர்பான கட்டணங்களுடன் கூடிய விளம்பரங்கனைப் பிரசுரிக்கவே உதயன் செயற்பட்டது.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் செய்தி வெளியிடாது அவர்களின் செத்தவீடுகளையும் அந்தியேட்டி நிகழ்வுகளையும் உதயனில் காசு கட்டி விளம்பரமாக பிரசுரித்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.
ஞானந்தியை படையினரின் வாகனம் நசுக்கிக் கொன்றதைக் கூட உதயனால் பிரசுரிக்க முடியவில்லை….
கிருசாந்தி காணாமல் போன மறுநாள் சுண்டுக்குளி மாணவியைக் காணாவில்லை என உதயன் பீடத்திற்கு தெரியப்படுத்தியும் உதயன் செய்தி வெளியிடவில்லை. அதே நேரம் ரஜனி தொடர்பாக தெரியப்படுத்தியும் செய்தி வெளியிடவில்லை. கிருசாந்தியும், ரஜனியும் பிணமாக வெளிவந்த போதே குறித்த செய்திகளை அதுவும் விபரமாக வெளியிடாது வெளியிட்டது உதயன். அத்துடன் மேலும் பல கடத்தல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள் தொடர்பாக புலிகளின் இளம் போராளிகள் துல்லியமான தகவல்களுடன் உதயன் பீடத்திற்கு பல்வேறு நபர்கள் ஊடாகத் தெரியப்படுத்தியும் செய்தி வெளியிடவில்லை. காணாமல் போனவர்களில் ஒரு சில பெண்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தையே உதயன் செய்தியாக வெளிப்படுத்தியிருந்தது.
கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் யாழ்ப்பாணக் களநிலவரம் தொடர்பான செய்திகளை துணிச்சலாக வெளியிட்டிருந்தாலும் கூட உதயன் அவ்வாறு பிரசுரிக்கவில்லை…
1996ம் ஆண்டு யாழ் இராணுவக் கட்டளைத் தளபதிகளுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிய வித்தியதரன் அவர்களின் தயவை வைத்து குடாநாட்டை விட்டு பலர் செல்வதற்கு பாஸ் அனுமதி பெற்றுக் கொடுத்து பணம் சம்பாதிக்கும் இரகசிய முகவராகவும் விளங்கினார். குறிப்பாக யாழ் மாநகரசபை குண்டு வெடிப்பில் பலியாகிய யாழ்ப்பாண நகர படைத் தளபதி பிரிகேடியர் சுசந்த மென்டிசுடன் மிக நெருங்கிய தொடர்பை வித்தியாதரன் வைத்திருந்தார். வித்தியாதரனின் திருவிளையாடல்கள் தொடர்பாக புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்கள் உள்ளன……
தற்போது தானே செம்மணி விவகாரத்தை வெளியே கொண்டுவந்ததாக அறிக்கை விடும் வித்தியாதரனின் செயற்பாட்டை அந்தக் காலத்தில் வெளி வந்த உதயன் பத்திரிகைகளை தொடர்ச்சியாக பார்த்திருந்தால் அறியக்கூடியதாக இருக்கும்.
1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் பலாலிவீதியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதல் ஒன்றில் பல படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் படையினர் தெருவால் சென்ற பலரை சுட்டு கொன்றனர். அதில் பிரபலபாடசாலை மாணவனும் அடக்கம். அந்தச் செய்தியை உதயன் ”மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் நடந்த கண்ணிவெடித்தாக்குதலில் படையினரும் மாணவர்கள் உட்பட 5 பொதுமக்கள் பலி என தலைப்பு போட்டதுடன் கண்ணிவெடித்தாக்குதல் தொடர்பாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றார்கள் எனவும் தெரிவித்து அத்துடன் படையினர் கொடுத்த புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல் என்ற அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
அது தொடர்பாக வித்தியாதரனை விசாரிக்கவென கொக்குவில் மஞ்சவனப்பகுதி முருகன் ஆலயத்தின் வட மேற்கு மூலையால் செல்லும் வீதியில் அமைந்திருந்த புலிகளின் தற்காலிக முகாமுக்கு வித்தியாதரனை வரச் சொல்லி புலிகள் அழைப்பு விடுத்திருந்து வித்தியாதரன் செல்லவில்லை.
அதே நேரம் வித்தியாதரனின் வீடு அமைந்திருந்த யாழ் இந்துமகளீர் கல்லுாரிக்கு அருகில் உள்ள வீதிக்கு சமீபமாக படையினர் காவல் காக்க தொடங்கினார். ஏற்கனவே அரசடி வீதியும் பிறவுன் வீதியும் சந்திக்கும் சந்தியில் படையினரின் காவலரண் இருந்ததையும் விட குறித்த பகுதியில் படையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.
புலிகளின் உயர் பீடத்திற்கு வித்தியாதரன் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அந் நேரத்தில் வித்தியாதரனுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு புலிகளின் உயர்பீடம் அனுமதிக்காமல் தவிர்த்து வந்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் உள்ளூரில் செயற்பட்ட புலி உறுப்பினர்கள் உதயன் செயற்பாட்டில் கடும் விசனத்துடன் இருந்தார்கள். அத்துடன் கேட்பதுக்கு யாரும் இல்லாத நிலையில் மிகச் சுதந்திரமாக செயற்படு நிலையில் இலகுரக ஆயுதங்களுடன் வலிகாமம் பகுதிக்குள் இரகசியமாக தங்கியிருந்த புலிகள் உயர்பீட அனுமதி வராத நிலையில் தமது கோபத்தை அடக்கி வைத்திருந்தமை புலிகளின் உயர்பீடத்திற்கான கட்டளைக்கு மதிப்புக் கொடுக்கும் நிலையை காண்பித்திருந்தது என 2002ம் ஆண்டு சமாதான காலத்தில் புலிகள் யாழ் வந்த போது சில ஊடகச் செயற்பாட்டாளர்களிடம் தெரிவித்திருந்தார்கள்.

