புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் அப்புசிங்கம் சாந்தினியை அடித்துக் கொன்ற யானை!!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் நேற்று (31) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குடா முனைக்கல் வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின தாயான அப்புசிங்கம் சாந்தினி (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற வரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவிணர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.