கிளிநொச்சியில் கடன் கொடுத்து மனைவியை படுக்கைக்கு அழைத்த நிதிநிறுவனம் மீது கணவன் தாக்குதல்!!

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச் சேர்ந்தவர் கடனை செலுத்தாத போது வங்கியில் இருந்து அழைப்பு எடுத்து கடனைச் செலுத்து இல்லாவிடின் மனைவியை படுக்கைக்கு விடு என்று கூறியதாக கூறியே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவ் அலுவலகத்தின் மீது தாக்கி சேதமாக்கியபின் அலுவலகத்தின் முகாமையாளரும் தாக்கப்பட்டுள்ளார்.பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்தாத சந்தர்ப்பங்களில் கொழும்பில் உள்ள காரியாலயத்தில் இருந்தே அழைப்பு எடுத்து கடனைச் செலுத்துமாறு கோருவதே வழமையான செயற்பாடாகும். அந்த அழைப்பிற்கும் கிளிநொச்சி காரியாலயத்திற்கும் தொடர்பில்லாத நிலையிலேயே குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

error

Enjoy this blog? Please spread the word :)