புதினங்களின் சங்கமம்

திருகோணமலை ஜோடியின் திருவிளையாடல்கள் ரிக்டொக் வலையில் வெளியாகி லட்சக்கணக்கில் ரசிகர்கள்!! பகுதி 1 வீடியோ

திருகோணணமலையைச் சேர்ந்த ஒரு ஜோடி ரிக்டொக் வலைத்தளத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகின்றார்கள். குறித்த வீடியோக்களில் சிலவற்றை நாம் இங்கு பிரசுரித்துள்ளோம். இவர்களை சிலர் கேலி செய்து பதிவுகளை வெளியிட்டிருந்தாலும் இவர்கள் குறித்த வலைத்தளத்தில் தமது வீடியோக்களை தொடா்ந்து பதிவு செய்து பல லட்சம் லைக்குகளை அள்ளி வருகின்றார்கள்.

ஒவ்வொரு பாடல்களுக்கும் பொருத்தமான உடைகளை அணிந்து ஒரு கலக்கு கலக்கி வருகின்றார்கள். குறித்த ஆடைகளுக்காக இவர்கள் பெரும் செலவு செய்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அத்துடன் இவர்களது காட்சிகளை மனம் கோணாது வீடியோ எடுத்து வருபவர் யார் என்பதை இவர்கள் வெளிப்படுத்தினால் இவ்வாறான சந்தோசங்களில் ஈடுபடும் வேறு சிலருக்கும் உறுதுணையாக இருக்கும்.

ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் சினிமாப் பாட்டுகளுக்கு வாய் அசைத்து அதை வைத்து பிரபலமாகிய சில போதைப்பொருள் பாவனையாளர்கள் தற்போது சமூக சேவை என கூறிக் கொண்டு வெளிநாட்டுத் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து பெருமளவு பணத்தை கொள்ளையடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குறித்த ஜோடி ஈடுபடாது தமது மனத் திருப்திக்காக இவ்வாறான செயற்பாட்டை செய்தால் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்….

இவர்களது வீடியோக்களை பகுதி பகுதியாக நாம் இங்கு வெளியிட்டு வாசகர்களை மகிழ்விப்போம்…